இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 70 வது வருடாந்த நிகழ்வும் பத்திரிகையாளர்கள் கௌரவிப்பும் மூத்த பத்திரிகையாளர் காலம் சென்ற காரிய கரவன நினைவு தின வைபவம் நவம்பர் 26 ஆம் திகதி கொழும்பு ஹில்டன ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
பிரதம அதிதியாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்து கொள்வார்.
இந் நிகழ்வில் மூத்த பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப் படுகின்றனர்.
இதில் வாழ்நாள் சாதனையாளர் சிலுமின முன்னாள் பத்திரிகையாசிரியர் இந்துனில் ஹகவட்ட கலாநிதி அனுர விக்கிரமசிங்க, அக்கரைப்பற்று- மூவின மொழி பத்திரிகை.
இலக்ரோனிக் ஊடகவியலாளர் எம்.ஏ பஹூர்த்தீன், மற்றும் இலக்ரோனிக் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொஸ்மன் சேனாரத்தின தமிழ் மொழிமூலம் மட்டக்களப்பு பிரதேச சிரேஷ்ட ஊடகவியலாளர் ராசய்யா செல்வராஜ், டெயிலி நியூஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் ஞாயிறு ஜலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் மகிந்த சில்வா, சிரேஷ்ட புகைப்படப்பிடிப்பாளர் லால் நாகொட, ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊடகவியலாளர் தயா தி அல்விஸ், கண்டி லேக்கவுஸ் பிரதேச ஊடகவியலாளர் ஒலிவர் சில்வா, லங்கா தீப ஆசிரியர் சிரி ரணசிங்க, ஆகியோர்கள் இவ்வருட ஊடகவியலாளர் கௌரவங்களை பெறுகின்றனர்.
இம்முறை விருது பெரும் ஊடகவியலாளர்கள் அவர்கள் சுயசரிதை அடங்கிய இதழ் ஒன்றும் வெளியிடப்படும் என இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
-அஷ்ரப் ஏ சமத்
