அரசியல்உள்நாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளை இன்றையதினம்(10) நுவரெலியா கிரேன்ட் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்கள்.

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்தியாஞ்சல் பாண்டே மற்றும் இந்திய இணை உயர்ஸ்தானிகர் (கண்டி) வீ.எஸ். சரண்யா ஆகியோரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில், இருநாட்டு நட்புறவு, தொழிலாளர் நலன், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன்போது இ.தொ.கா சார்பில் நிதிச்செயலாளரும், தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாநகர சபை பிரதி மேயர் சிவன்ஜோதி யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத், அமைப்பாளர் சின்னையா பாலகிருஸ்னன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Related posts

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ந்தும் PCR பரிசோதனைகள்

“கொள்கைகள் தொடர்பில் விவாதம் நடாத்தினால் எமக்கும் சந்தர்ப்பம் வேண்டும்” நாமல் ராஜபக்‌ஷ

பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு