அரசியல்உள்நாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 87 வது வருட அகவை தினம் இன்று!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்(இ.தொ.கா) இன்று அதன் 86 வது ஆண்டு நிறைவடைந்து 87 வது வருட அகவையில் கால் பதிக்கின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமியபவனில் விசேட பூஜை வழிபாடுகளுடன் முன்னாள் தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அனுஷ்டிக்கப்பட்டது.

இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் முன்னாள் தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்கள்.

1939 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இ.தொ.கா 87 வருட வரலாற்றைக் கொண்ட மாபெரும் தொழிற்சங்கமாகும்.

இந்நிகழ்வில் இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், பிரதம சட்ட ஆலோசகர் மாரிமுத்து, உபத்தலைவர்களான. சின்னையா ராஜமனி, செல்லசாமி திருக்கேஷ் மற்றும் காரியாலய உத்தியோகஸ்த்தர்கள் கலந்துக்கொண்டார்கள்.

Related posts

நாட்டில் இன்றும் 300 பேர் சிக்கினர்

UNPயோடு இணையும் 13 SLPP அமைச்சர்கள்!

இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் வைரஸ்!