வணிகம்

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 83000 முதல் 84000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்கூலியுடன் சேர்த்து ஒரு பவுன் தங்கத்தின் விலை 90000 – 100000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு முன்னர் தங்கம் ஒரு பவுனின் விலை 70,000 ரூபாவுக்கு விற்பனையாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடுகையற்ற கட்டணம் செலுத்தும் முறையோடு Lanka IOC உடன் கைகோர்க்கும் HNB SOLO

யால தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் ஆகக்கூடிய வருமானம்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி , பொதுமக்களை பணயமாக வைத்துக் கொள்வதல்ல – நிதியமைச்சர்