உள்நாடு

இலங்கை குறித்த பிரேரணையின் வாக்கெடுப்பு இன்று

(UTV |  ஜெனீவா) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை, இன்று(22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பெரும்பாலும், பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினமே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகள் முன்வைத்துள்ளன.

விவாதத்தின் இடைநடுவே, சில நாடுகள் தலையீடும் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை வரை பிற்போடப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

47 உறுப்பு நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், குறித்த பிரேரணை தொடர்பில், தமது நட்பு நாடுகளுக்கு அறிவுறுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

புதிய வைரஸ் பரவல் – சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களின் விபரங்கள் சேகரிப்பு

editor

கர்ப்பிணிப் பெண் தீயில் எரிந்து மரணம் – யாழில் சோகம்

editor

இலங்கைக்கு வந்த மியன்மார் பிரஜைகள் மீது சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை

editor