தற்போதைய அரசாங்கம் மூட திட்டமிட்டுள்ள அரச நிறுவனங்களில் (முயற்சியாண்மைகளில்) இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபணமும் உள்ளடங்கியிருப்பதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக குறித்த அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட சந்தர்ப்பத்தில், சபாநாயகர் இது தவறான செய்தி என்று குறிப்பிட்டார்.
மூடப்படும் நிறுவனங்களின் பட்டியலில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபணம் உள்ளடங்கவில்லை என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.
எனவே, அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் சபாநாயகர் அவ்வாறு கூறியது உண்மை தானா என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
