உலகம்உள்நாடு

இலங்கை கடற்கொள்ளையர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்

(UTV | கொழும்பு) –  இலங்கை கடற்கொள்ளையர்கள் குறித்து திடுக்கிடும் தகவல்

நேற்று முன்தினம் இலங்கை கடற்பரப்பில் 7 தமிழக மீனவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவர் வாள் வெட்டுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற நம்பியார் நகரை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் (3 படகில் 10 பேர்) கத்தி, கட்டையுடன் சென்று தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது, படகு உரிமையாளர் முருகன் வாள் வெட்டுக்கு உள்ளாகி கையில் காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்கை நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது நாகை மீனவர்களிடம் இருந்து திசைகாட்டும் கருவி, வாக்கிடாக்கி ஆகியன பறித்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமாய் குறிப்பிடத்தக்கது .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஞானசாரவுக்கு விடுதலையா? கடிதம் தயார்

153 ஆசனங்களை வைத்திருந்த மஹிந்த இன்று மூன்று ஆசனத்தை வைத்திருக்கிறார் – நாம் கவலைக்கொள்ள தேவையில்லை – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு