வகைப்படுத்தப்படாத

இலங்கை, இந்திய பிரதமர்கள் புதுடில்லியில் சந்தித்தனர்

(UDHAYAM, COLOMBO) – பொருளாதாரம், முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் தொடர்பான இந்தியா இலங்கைக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

புதுடில்லியில் அமைந்துள்ள ஹைதராபாத் மாளிகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தனது.

இதன்போது, உரையாற்றிய இந்திய பிரதமர், எதிர்வரும மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய ஆர்வத்துடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ, முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தொடர்பான உயர் கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைகழகத்தை இலங்கையில் ஸ்தாபிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

Related posts

ஜமால் கசோகி படுகொலையுடன் சவுதி இளவரசர் தொடர்பு

Parliamentary Select Committee to convene today

விரைவில் அமைச்சரவையில் சீர்த்திருத்தம்