இலங்கை இசைத்துறை வரலாற்றில் பாடல் ராணியின் மறைவால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
எனது தந்தையாரின் காலத்திலிருந்தே நான் இவருடன் நெருங்கிய நட்புறவைப் பேணி வந்தேன். ஒவ்வொரு கம் உதாவ கூட்டத்திலும் கலந்து கொண்டு, நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்தின் சேவைகளுக்கும் பெரும் பக்க பலமாக இருந்தார் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அன்று தொட்டு காணப்பட்டு வந்த நட்புறவு காரணமாக, எனது நாள் குறிப்பேட்டுப் புத்தகத்தில் ஒவ்வொரு நவம்பர் 21 ஆம் திகதியும், என்னதான் வேலைப்பளு காணப்பட்டாலும், மறக்காமல் அவருடைய பிறந்தநாளன்று நாம் அவரைச் சந்தித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தோம்.
இவர் எல்லா நேரங்களிலும் நேர்பட பேசும் நல்ல மனிதராக திகழ்ந்தார்.
எம்மை விட்டு விடைபெற்றுச் செல்லும் இத்தருணத்தில் அன்னாரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
திருமதி லதா வல்பொலவின் இறுதிக் கிரியைகள் இன்று (31) பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
