உள்நாடு

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  இலங்கை ஆட்பதிவு திணைக்களம் இன்று(16) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய கிளைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படவுள்ளன.

திணைக்களத்தின் ஊழியர்கள் பலர் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அலுவலகங்களின் ஊழியர்களை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், தேசிய அடையாள அட்டைகளுக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்கள் குறிப்பிட்ட அஞ்சல் முகவரிகள் மூலம் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

அனர்த்த முன்னாயத்தம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி நேரில் ஆய்வு

editor

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

சீனாவின் சேதன பசளை இறக்குமதிக்கு தடை