விளையாட்டு

இலங்கை அணி வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தவிர்ப்பதற்காக இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை என இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இரண்டு டெஸ்ட் தொடரிற்காக இங்கிலாந்து அணி இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னதாக ஜோ ரூட்டிடம் கொரோனா வைரஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது எங்கள் வீரர்கள் பலர் உடல் நலப்பாதிப்பிற்குள்ளானதை கருத்தில் கொள்ளும் போது உடல் ரீதீயான தொடுகையை குறைந்தளவிற்கே வைத்துக் கொள்வதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தினார் சமரி

தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன நியமனம்

ஆட்ட நிர்ணய சதி 2011 – ஆதாரங்கள் வழங்கப்படவில்லை – ஐசிசி