விளையாட்டு

இலங்கை அணி குறித்து கவலை கொள்ளும் முன்னாள் தலைவர்

(UTV|COLOMBO) இலங்கை அணி பல இருண்ட யுகங்களை எதிர்க்கொண்டிருந்தாலும் , தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு மிக மோசமானது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மாவன் அதபத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிர்வாகத்தில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன.

டெஸ்ட் அணிக்கு புதிய வீரர்களை இணைத்துக்கொள்ளும் போது அவர்கள் அதற்கு தயாராக உள்ளனரா என்பது தொடர்பில் புரிந்து செயற்பட வேண்டும்.

அதேபோல், சங்கக்கார , மஹேல , தில்ஷான் போன்று சமீபத்தில் ஓய்வு பெற்ற ரங்கன ஹேரத்தின் சேவையை பெற்றுக்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 18 மாதக்காலப்பகுதியில் 30க்கும் அதிகமான வீரர்கள் தேசிய அணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதை கொண்டு இலங்கை கிரிக்கட்டின் தற்போதைய நிலைமையை புரிந்து கொள்ள முடியும் என மாவன் அதபத்து தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பஃப் டூ ப்ளெசிஸுக்கு LPL வாய்ப்பு

ICC T20 போட்டி அட்டவணை வெளியானது

சகலதுறை வீரர் தனஞ்சய லக்ஷன் முழங்காலில் உபாதை