விளையாட்டு

இலங்கை அணியின் முன்னாள் பிரபல வீரர் ஒருவருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு! ஆலோசகராக இலங்கை அணி வீரர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்,இந்திய – தமிழக பிரீமியர் லீக் தொடரின் திருவள்ளுவர் வீரன்ஸ் அணிக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதம் இந்த தொடர் இடம்பெறவுள்ளது.

திருவள்ளுவர் வீரன்ஸ் கழகத்தில் விளையாடும் போட்டியாளர்களுக்கு சிறந்த அலோசனைகள் வழங்க வேண்டி இருந்ததாக, அதன் உரிமையாளரும், இந்திய கிரிக்கட் அணித் தேர்வாளருமான வீ.பி.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதன்படியே முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முரளிதரனின் சிறந்த அனுபவமும், நிபுணத்துவமும் இந்த கழகத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 341 என்ற வெற்றி இலக்கு

கொல்கத்தா அணியிலும் கொரோனா

LPL ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசை அறிவிப்பு