உள்நாடுவிளையாட்டு

இலங்கை அணிக்கு மீண்டும் அபராதம்

சிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று (31) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.

போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கை அணி இலக்கை விட ஒரு ஓவர் குறைவாக வீசியதாக நடுவர்களால் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் முன்மொழியப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டமையினால் மேலதிக விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்னதாக போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் தொற்றாளர்களை வீட்டில் வைத்து கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor

தொற்று நோய்தடுப்பு பிரிவுக்கு GMOA அழைப்பு