விளையாட்டு

இலங்கை அணிக்கு புதிய வேகப் பந்து பயிற்றுவிப்பாளர் நியமனம்…

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கிரிக்கட் அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளரான அலன் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி வெற்றியாளர் கிண்ணத்தை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை அணியின் வேகப் பந்து பயிற்றுவிப்பாளராக சம்பிக்க ராமநாயக்க செயற்படுகிறார்.

இந்நிலையில் எலன் டொனால்ட் 6 மாத ஒப்பந்த அடிப்படையில் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

Kandy Warriors இனை தோற்கடித்த Jaffna Kings

ICC – 2024-2031 : ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அறிவிப்பு

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து