உள்நாடுவிளையாட்டு

இலங்கை அணிக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்ற புத்தளம் பள்ளிவாசல்துறை எம்.டி.எம். தஹீர்!

இலங்கை அணிக்காக விளையாடி வெண்கலப் பதக்கம் பெற்ற எம்.டி.எம். தஹீர்! இவர் மன்னார் கொண்டச்சியைச் சேர்ந்தவர் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் எம்.டி.எம். தஹீர், பங்களாதேஷில் நடைபெற்ற CAVA Cup for Men 2025 சர்வதேச கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடி மூன்றாம் இடத்தை (Bronze Medal) பெற்றுத் தந்துள்ளார்.

தனது சிறப்பான ஆட்டத் திறமையால் (outstanding performance) திகழ்ந்த தஹீர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் “Best Player of the Match” எனத் தேர்வாகி, தனிப்பட்ட முறையிலும் பெருமை சேர்த்துள்ளார்.

எம்.டி.எம்.தஹீர் அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் UTV பெருமையடைகிறது.

Related posts

சுகாதார அமைச்சின் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

கோட்டா கோ கிராமத்தின் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றுவது குறித்து சட்டமா அதிபரின் நிலைப்பாடு

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்