நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 342,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 314,200 ஆயிரம் ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,275 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.
