உள்நாடு

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனுடன் ஒப்பிடுகையில், இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,150 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (25) சுமார் 6,000 ரூபா அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொழும்பு செட்டியார் தெரு, தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 309,200 ரூபாயாக காணப்படுகிறது.

நேற்று (24) 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 303,600 ரூபாவாக காணப்பட்டது.

மேலும் நேற்றைய தினம் 330,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்றைய தினம் 336,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மேலும் 11 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

2024 ஆம் ஆண்டுக்கு நிகராக 94% ஆல் தொழிற்பாட்டு செயலாற்றுகை வளர்ச்சியை பதிவு செய்துள்ள கப்ருக நிறுவனம்

editor

போதை பொருட்களுடன் 04 பேர் கைது