உள்நாடு

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை – 4 இலட்சத்தை எட்டுகிறது

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் பவுண் தங்கத்தின் விலை 390,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது நேற்றைய நாளில் 380,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

அதேநேரம் 22 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 360,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது நேற்றைய நாளில் 351,500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 4,230 அமெரிக்க டொலரை அடைந்துள்ளமையினால் இவ்வாறு தங்கம் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

விலங்குகள் நல சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க அனுமதி

உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே.

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!