உள்நாடு

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

அதன்படி, இன்று (21) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 245,000 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை, இதன் விலை 240,500 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை 260,000 ரூபாயாக காணப்பட்ட 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 265,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பாராளுமன்ற கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட கூட்டம்

ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிப்பதற்கு இன்று முதல் அனுமதி

அமைச்சரவை ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்

editor