உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில் தங்க விலையில் இன்று (19) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,660 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அதன்படி இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (19) தங்க விற்பனை நிலவரப்படி,
22 கரட் பவுண் தங்கத்தின் விலை 340,400 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதேநேரம் 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 368,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
