உள்நாடு

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சுமார் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.

அதன்படி, இன்று (03) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 262,700 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த புதன்கிழமை (27) 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 252,500 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த புதன்கிழமை 273,000 ரூபாயாக காணப்பட்ட 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 284,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்

editor

மேலும் 61 பேர் பூரண குணம்

புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன பதவியேற்பு

editor