உள்நாடு

இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் மூலம் இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நாட்டில் டெல்டா பிளஸ் திரிபடையுமாயின் பொதுமக்களின் செயற்பாடு அதற்கு காரணியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்றுவது அவசிம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் டெல்டா பிளஸ் திரிபு குறித்து நாட்டில் தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகள் ஊடாக பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Related posts

அரச ஊழியர்களின் சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவோம் – சஜித்

editor

ஜனாதிபதி அநுர பாராளுமன்றம் வருகை

editor

எனது அமைச்சு பதவியிலிருந்து நீங்கிவிட்டேன் – காஞ்சன விஜேசேகர

editor