உள்நாடு

இலங்கையில் சிலருக்கு கொரோனா வைரஸ்

(UTVNEWS | COLOMBO) -இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தற்போது சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேர் அங்கொடை தொற்று நோய் (ஐ.டி.எச்.) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஒருவர் குருநாகல் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் வைத்தியர் சுதாத் சமரவீரா தெரிவித்தார்

Related posts

புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

நான் குற்றவாளியாக இருந்தால் எனக்கு மரண தண்டனையினை வழங்குங்கள் [VIDEO]

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் செயலிழந்த புற்றுநோய் சிகிச்சை இயந்திரங்கள்

editor