உள்நாடு

இலங்கையில் குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்க திட்டம்

(UTV | கொழும்பு) –     இலங்கையின் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகளின் போசாக்கு தேவையை பெற்றோர்களால் நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் அந்த குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளின் போசாக்கு தேவையை பெற்றோர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், அந்த குழந்தைகளுக்கான வளர்ப்பு பெற்றோர் முறைமையை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை 21,000 போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டிய அவர்,

ஊட்டச்சத்து குறைபாடுள்ள 40,000 குழந்தைகளை இலக்காகக் கொண்டு இந்த வளர்ப்பு பெற்றோர் தேடல் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இத் திட்டத்திற்காக அரசாங்கத்தினால் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய நிறுவனம் ஒன்றும் இலங்கையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றும் இதற்காக ஒரு பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor

இலங்கைக்கான புதிய தூதுவர்கள் பிரதமர் ஹரிணியை சந்தித்தனர்

editor

இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூன்று பேர் வைத்தியசாலையில்

editor