உள்நாடு

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் பச்சை ஆப்பிள் அறுவடை ஜனாதிபதிக்கு

(UTV | கொழும்பு) – இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் முதல் அறுவடை இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

தம்புத்தேகம, கல்கமுவ பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் விவசாயி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் குமார பச்சை ஆப்பிள் பயிரிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தனது ஆப்பிள் பண்ணையைப் பற்றிக் கேட்டறிந்ததாகவும், எதிர்காலத்தில் அந்தப் பண்ணையைப் பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஆப்பிள் விதைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு தான் ஆப்பிள் சாகுபடியை ஆரம்பித்துள்ளதாகவும் லக்ஸ்மன் குமார ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பயிர்ச் செய்கையை பிரபலப்படுத்துவதற்குத் தேவையான விதைகளை உற்பத்தி செய்து வழங்க முடியும் எனவும், இலங்கையின் எந்தப் பகுதியிலும் பயிரிடக் கூடிய வகையில் இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

தமக்கு வழங்கப்பட்ட பச்சை ஆப்பிள்களை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பச்சை ஆப்பிள்களை சுவைக்கவும் செய்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச மற்றும் பீ.ஜே.அசங்க லயனல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

‘MT NEW DIAMOND’ – இரண்டாக உடையும் அபாயம் இல்லை

போலி வாக்குறுதிகளை வழங்கியே NPP வாக்குகளைப் பறித்தது – பழனி திகாம்பரம் எம்.பி

editor

மஹிந்த துபாய்க்கு உத்தியோகபூர்வ விஜயம்