உள்நாடு

இலங்கையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – 4 இலட்சத்தை கடந்தது

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினத்துடன் (16) ஒப்பிடும் போது இதன் விலை இன்று 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் (17) 13 ஆயிரத்து 800 ரூபாய் அதிகரித்து 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாக காணப்படுகிறது.

நேற்றைய தினம் (16) 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 லட்சத்து 65 ஆயிரத்து 400 ரூபாயாகவும் காணப்பட்டது.

Related posts

அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது குறித்து இன்று தீர்மானம்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

editor

பம்பலப்பிட்டியில் வீடொன்றில் அத்து மீறிய கொள்ளை…