கிசு கிசு

இலங்கையில் இருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு அரசினால் அவசர எச்சரிக்கை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக நாட்டை விட்டும் வெளியேறுவதை தற்காலிகமாக ஒத்திவைப்பது பொருத்தமானது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நாடுகளில் தொழிலாளர்கள் பணிபுரிந்தால் அந்நாட்டு சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பணியகம்தொழிலாளர்களை கேட்டுக் கொள்கிறது.

அது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள அந்நாட்டுக்கு உரித்தான தூதரக அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறும் கோரப்படுகின்றது.

இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அலுவலகம் 1989 எனும் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றினையும் அறிமுகப்படுத்தி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் பட்டியல் இதோ…

சந்திமால் – பியூமி : கொரோனா கொத்தணி?

சில திட்டங்களை கையாண்டு போட்டியில் வெற்றி பெறுவோம் – திமுத்