உள்நாடு

இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துகள் – 5 மாதங்களில் 965 பேர் பலி

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் வீதி விபத்துகளினால் 965 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜனவரி 1 முதல் மே 13 வரை நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துகளினால், மேற்படி நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காலப்பகுதியில் 902 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக 1,842 பாரிய விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிகளின் கவனக் குறைவு, மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவையே பல விபத்துகளுக்குக் காரணம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டத்தை செயல்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதோடு, இதனூடாக சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 24 மணித்தியாலங்களில் 63 வாகனங்கள் பறிமுதல்

ஸஹ்ரானுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கு மீளவும் விளக்கமறியலில் [VIDEO]

மூவரை பலி கொண்ட அதே இடத்தில் விபத்துக்குள்ளாகி 150 அடி பள்ளத்தில் வீழ்ந்த டிப்பர்

editor