அரசியல்உள்நாடு

இலங்கையிலுள்ள தூதுவர்கள் ரூ. 3.6 மில்லியன் நன்கொடை

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் இணைந்து தமது தனிப்பட்ட நிதியிலிருந்து ரூ. 3.6 மில்லியன் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்தோனேசியத் தூதுவர் Dewi Gustina Tobing, இன்று (11) குறித்த காசோலையை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார்.

கொழும்பில் உள்ள தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான கொரிய தூதுவர் Lee Miyon, சுவிட்சர்லாந்து தூதுவர் Dr. Siri Walt, பலஸ்தீன தூதுவர் Ihab I.M. Khalil, மாலைதீவு உயர் ஸ்தானிகர் Masood Imad,, ஓமான் தூதரகத்தின் பணிக்குழாம் பிரதானி Said Al Harbi, இத்தாலிய தூதரக பிரதித் தலைவர் Alberto Arcidiacono ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

ஜனாதிபதி நிதியத்திற்கு IOC நிறுவனம் 100 மில்லியன் ரூபா நன்கொடை

editor

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்கு செல்ல பணிப்பு