உள்நாடு

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிக்கை

(UTV | கொழும்பு) –   தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(06) விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவது குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

அண்மையில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயங்களை மேற்கொண்ட ஜனாதிபதி, இந்தியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பிரதமர்களுடன் கலந்துரையாடினார்.

அரச தலைவர் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியையும் சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் வருடாந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியதுடன், பல உலகளாவிய பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசியாவின் முன்னோக்கி செல்லும் பாதை பற்றிய உரையை நிகழ்த்தினார்.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

வெள்ளியன்று 12 மணி நேர நீர் வெட்டு

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று