உள்நாடு

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நாளை(14) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும் இடப்பற்றாக்குறையை கவனத்தில் கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

எந்தவொரு சுயநல அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர மாட்டோம் – தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் சு.கபிலன்

editor

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படும் – அமைச்சர் வசந்த சமரசிங்க அதிரடி அறிவிப்பு

editor