உள்நாடு

இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை நாளை மறுதினம் (31) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதன் முதற்கட்டமாக துபாயில் தங்கியுள்ள இலங்கையர் சிலர் நாளை மறுதினம் அழைத்து வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, அவர்கள் நாடு திரும்பிய பின்னர் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related posts

PCR ஆன்டிஜென் சோதனைகளுக்கு கட்டுப்பாட்டு விலை

மேலும் 12 கடற்படையினர் குணமடைந்தனர்

ஊரடங்கு வேளையில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்