வணிகம்

இலங்கைக்கு 400 மில்லியன் யுவான்களை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்து

(UDHAYAM, COLOMBO) – பொருளாதாரத்தை கட்டி எழுப்ப உள்ள ஒரே வழி ஏற்றுமதியை சக்தியப்படுத்துவது மாத்திரமே என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய சந்தைக்குள் மாத்திரம் பொருளாதார இலக்கினை அடைந்துவிட முடியாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சீனாவுக்கு இலங்கைக்கும் இடையே பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்புகளை விருத்தி செய்யும் பொருட்டு 400 மில்லியன் யுவான்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றிலும் பிரதமர் கைச்சாத்திட்டுள்ளார்.

சீன விஜயத்தின் இறுதி நாளான நேற்று தலைநகர் பீஜிங்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அந்நிய செலாவனி விதிமுறைகளை தளர்த்த தீர்மானம்

‘Super night Selfies’ சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ள vivo V19

மரக்கறிகளின் விலை 4 மடங்கு அதிகரிப்பு