உள்நாடு

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 மில்லியனை தாண்டியுள்ளது

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (17) 20 இலட்சம் என்ற எல்லையைத் தாண்டியுள்ளது.

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இங்கிலாந்தின் இலண்டன் நகரிலிருந்து UL-504 என்ற இலக்க ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்த தம்பதியினருடன், இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வாறு 20 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களான ரஃபேல் கரோன் மற்றும் அவரது மனைவி கிளெய்ர் சார்லட் ஆகியோருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்தத் தம்பதியினர், இலங்கையில் இரண்டு வாரங்கள் தங்கியிருக்க உள்ளனர்.

இந்தத் தம்பதியினரை வரவேற்பதற்காக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் நிர்வாக மற்றும் மனிதவளப் பணிப்பாளர் அனூஷா தமயந்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்று விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தது.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பிணையில் விடுதலை

editor

ஐக்கிய மக்கள் சக்தி பதவி நிலைகளில் மாற்றம்

editor

ஹெரோயினுடன் நபரொருவர் கைது