(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தங்கள் நாட்டினர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
எதிர்வரும் விடுமுறை நாட்களில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது.
தீவிரவாதிகள் எதிர்வரும் தினங்களில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
