உள்நாடுவிளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

பல்லேகலயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

மாலை 06.30 மணிக்கு நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

எனவே போட்டி 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Kusal Mendis 37 ஓட்டங்களையும், Pathum Nissanka 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Sam Curran அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹெற்றிக்கை பெற்றதுடன், Adil Rashid 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.

இதன்படி 134 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது.

இதன்படி டக்வத் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Phil Salt 46 ஓட்டங்களையும், Tom Banton 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

03 போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் தொடரில் இங்கிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Related posts

அரசியலில் விரைவில் பாரிய சுழல்காற்று வீசக்கூடும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை

editor

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.

அதிக விலையில் பாணை விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை.