அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு!

வெள்ளம் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நேற்று (19) தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு அவர் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

இந்த தொலைபேசி அழைப்பின் போது, ​​வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும், இந்நாட்டு மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஷேக் முகமது பின் சயீத், இந்த அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு வலிமையும் தைரியமும் கிடைக்க பிரார்த்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்தவும், மேலதிக உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் வழிகளை ஆராயவும், சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியம் பின்பற்றும் நீண்டகால மனிதாபிமானக் கொள்கைக்கு ஏற்ப,
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவசர நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தேவையான உதவி, உடனடி நிவாரணம் வழங்குதல் மற்றும் நீண்டகால ரீதியிலான மீட்புகளிலும் கவனம் செலுத்தி, இந்த உதவி வழங்கப்படுவதாக இதன்போது தெரிவித்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி, இந்த நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்து தேவையான ஆதரவை வழங்குவதற்கான தமது நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சர்வதேச உதவி வழங்குவதற்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் முகவர் நிறுவனம் மற்றும் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் அமைப்பு ஆகியவை இணைந்து இந்நாட்டில் விரைவான நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்ததுடன் அபுதாபி சிவில் பாதுகாப்பு குழுக்களால், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு மற்றும் அவசரகால தங்குமிட வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை அதில் அடங்கும்.

இந்த அனர்த்த நிலைமையின் போது ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கிய உடனடி உதவி, தொடர்ச்சியான நிவாரணப் பணிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ததுடன், அது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால உறவுகளின் பிரதிபலிப்பைக் குறிக்கிறது.

Related posts

இலவசக் கல்வியை முழுமையாக பாதுகாப்பதோடு மாற்றுக் கல்விக்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும் – சஜித்

editor

மூதூர் பொலீஸ் நிலையத்தின் சிறுவர் தின நிகழ்வு.

editor

இலங்கையை வந்தடைந்தார் நடிகை சிம்ரன்

editor