அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என பொருளாதார அபிவிருத்தி விவகாரங்களிற்கான பிரதியமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கடிதம் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது,இன்று அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக நிலுவையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர் கடந்த ஐந்து வருட தரவுகள் அமெரிக்காவுடனான வர்த்தக நிலுவை அதிகரித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளன,என அவர் தெரிவித்துள்ளார்.