சூடான செய்திகள் 1

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர்

(UTV|COLOMBO) இந்தியாவிற்கான விஜயத்தின் பின்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இலங்கை அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் எதிர்வரும் 24ம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.

அதனை தொடர்ந்தே அவர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மீண்டும் இயங்கும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்

editor

அலரி மாளிகையில் STF வீரரொருவர் தற்கொலை…

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்