அரசியல்உள்நாடு

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர், சபாநாயகரை சந்தித்தார்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் திருமதி (கலாநிதி) சிரி வோல்ட் (Siri Walt) கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (31) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்கம் மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் உள்ளிட்ட பிரதான துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சுவிட்சர்லாந்துத் தூதுவர், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான சுவிட்சர்லாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

Related posts

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி அநுர நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாமல்

editor

ஜோன்ஸ்டனின் வழக்கு நவம்பர் 24இல் – மேல் நீதிமன்றம்

இன்று முதல் Park & Ride பஸ் சேவை