அரசியல்உள்நாடு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று மாலை(12) நடைபெற்ற குறித்த இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது!..

இதன் போது மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களை சந்தித்த ஜீவன் தொண்டமான் பின்ருமாறு கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்!..

இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களின் மேம்பாட்டிற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களுடன் சிறப்பான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தேன்.

மேலும் எமது சமூகத்திற்கான நீண்டகாலமான நட்பு மற்றும் அர்ப்பணிப்புக்குகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

Related posts

வாக்களிப்பு நிலையத்தில் படம், காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை

editor

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

editor