உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

(UTVNEWS| COLOMBO) – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை குறித்து விளக்கம் பெற்றுக்கொள்ளவே அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே அது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு இலங்கை அரசு அமெரிக்காவிடம் கேட்டுள்ளது.

இந் நிலையிலேயே,  மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Related posts

பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யுக் கூடும்

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் உண்மை வெளியானது

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து