விளையாட்டு

இறுதிச் சுற்றில் ஜோகோவிச்

(UTV |  பிரான்ஸ்) – பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் ரஃபேல் நடாலை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

பிரெஞ்ச் ஓபனில் 14-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் நடாலும், 5 ஆண்டுகளுக்குப் பின் நடாலை வீழ்த்தும் முனைப்பில் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர். அரையிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ரஃபேல் நடாலை வீழ்த்தினார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்தது. நாளை நடைபெறும் பிரமாண்ட இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Related posts

ஐசிசி டெஸ்ட் அணியில் இடம்பிடித்த கமிந்து மெந்திஸ்

editor

பங்காளதேஷ் கிரிக்கெட் கட்டுபாட்டு சபை நிதி

T20 WC : நமீபியாவை வீழ்த்திய இலங்கை