உள்நாடு

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தைக்கு

இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகை இன்று (06) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சந்தையில் உப்பு விலையும் ஓரளவு அதிகரிக்கும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தன திலக தெரிவித்தார்.

நாட்டில் உப்பு உற்பத்தி குறைந்ததால், அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்ததுடன், அதன்படி, இந்தியாவில் இருந்து உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் உப்பு இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த உப்பு விலை உயர்வு தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் மார்ச் மாதத்திற்குப் பிறகு மீண்டும் அதே விலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தன திலக சுட்டிக்காட்டினார்

Related posts

இன்றைய தினம் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு

இன்று அவசரமாக தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி அநுர

editor

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ‘ஜனாதிபதி செயலகம்’