உள்நாடு

இறக்குமதி செய்யப்படும் அரிசி குறைந்த விலையில் விற்பனைக்கு!

நாட்டில் உள்ள மாஃபியாக்களை ஒழிக்கும் வகையில், இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியை ஒத்த, ஜீ. ஆர் ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராம் 250 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

இந்தியாவிலிருந்து 40ஆயிரம் மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்படும். சிறுபோக அறுவடையின் பின்னர் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது.

எனினும், சீரற்ற வானிலை மற்றும் ஏனைய காரணங்களால் அவை தடைப்படுமிடத்து, அரிசி இறக்குமதி செய்யப்படும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு

நாளை முதல் பேரூந்து சேவை ஆரம்பம்

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

editor