உள்நாடுவணிகம்

இறக்குமதி அரிசி 98 ரூபாவுக்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி இன்று (29) முதல் ஒரு கிலோகிராம் 98 ரூபாவுக்கு சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுங்கத்தின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் இதுவரையில் நாட்டரிசி அடங்கிய 09 கொள்கலன்கள் தமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனூடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

   

Related posts

திரைப்படத்தில் நடிக்கும் அமைச்சர் டயனா கமகே!

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரிப்பு

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!