வகைப்படுத்தப்படாத

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV|COLOMBO)-மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இரு மாவட்டங்களிற்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மாத்தளை மாவட்டத்தில் லக்கல, பள்ளேகல பிரதேச செயலக பிரிவும் சுற்றுப்புறங்களிலும், அல்கடுவ பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் கண்டி மத- தும்பர பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களை அண்மித்த இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரை அதிகரித்துள்ளதனால் , மேலும் மழை தொடருமாயின் மண்சரிவு , பாறை விழுகை , நிலவெட்டுசாய்வு மற்றும் தரை உள்ளிறக்கம் என்பவை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

India blown away by New Zealand

Pakistani national arrested with heroin

விவசாய உற்பத்தி தொழில்நுட்ப உயர்; தேசிய டிப்ளோமா கற்கை நெறி