உள்நாடு

இரு மருந்துகளுக்கு தடை

 (UTV|கொழும்பு) – அனைத்து மருந்து உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். 

விசேட வைத்தியர் ஒருவரின் சரியான மருந்து குறிப்பு இல்லாமல் “Chioroquine” மற்றும் “Hydroxychioroquine” எனப்படும் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை / அறிவுறுத்தல்களை மீறும் ஒவ்வொரு நபரும் குற்றமிழைத்தவர் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக 2015 ஆம் ஆண்டின் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் பிரிவு 131 ன் கீழ் வழக்குத் தொடப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

editor

பிணையில் விடுவிக்கப்பட்ட கெஹெலிய மற்றும் அவரது மகன் ரமித்

editor

அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!