உள்நாடு

இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்த தேரர் கைது

(UTV | கொழும்பு) –

நவகமுவ-பொமிரிய ரக்சபான பிரதேசத்தில் விகாரைக்கு சொந்தமான வீட்டை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பல்லேகம சுமன என்ற பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இன்று (08) நவகமுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பிக்கு பிரதேசத்தில் சில பெண்களுடன் தகாத செயல்களில் ஈடுபட்டதாக பிரதேசவாசிகளிடம் இருந்து பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் பிக்குவை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சாட்சியங்களை பதிவு செய்து, கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (08) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இதன்பின்னர், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“வன்னித் தலைவனை விடுதலை செய்” – வவுனியாவில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் [VIDEO]

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

editor

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ETF – EPF தொடர்பில் அரசு நடவடிக்கை